Friday, June 3, 2016

அலைந்து திரிபவனின் விம்பம்

புகைப்படத்தில் பார்த்த
உனது விம்பம்
நேரில் காணும் போது அது
உன்னை போலவே அல்ல
ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடித்த
பரவசத்தில் நீ ஊர் நோக்கி பயணிக்கிறாய்
அது
ஒரு கோடை நாளின் வெளிச்சத்தில்
மிகைத்த ஒப்பனையோடும் கட்டாயப்படுத்தப்பட்ட புன்கையோடும்
கருவி வழி வந்த போலி விம்பமது
பெருந் துயரம் துரத்தும் அயர்சியில்
கொடூரங்களை நினைவுகளாக்கி
மலையொத்த சாபங்களோடு
அலைந்து திரிபவனின்
நிஜ விம்பங்களை
அறிந்திருக்க உனக்கு எந்த
வாய்புக்களுமில்லைதான்.
2016.07.03

1 comment: