நிச்சயமின்மைகளின்
பிம்பங்களை காட்டிக்கழிந்தன
பல பருவங்கள்
துயர் கனாக்களால்
சிதைக்கப் பட்டிருந்த்து இந்த
உலகம்
யாவருமற்ற ஒரு வெளியில்
அலைந்து அலைந்து
துயர் மீட்டிய சுயம்
நிகழ் ஜீவியத்தின்
வன்மங்களை நிராகிக்கப்பட்ட
ஒரு காதலின் வலியாய்
கற்பித்துக்கொண்டது
அப்போதும் நான்
சப்தங்களை விழுங்கிய
இரவொன்றில் ஒரு
அழகி வெறுத்த காமமாகவும்
தவறிய அழைப்பொன்றில்
சிநேகிதமான
முகமறியா-ஒருத்தன்
ஒருத்தியின் மீது கொண்ட
காதலாகவும்
இந்த உலகத்தில்
வாழ்ந்து கொண்டுதான்
இருந்திருந்தேன்.
.
No comments:
Post a Comment